FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

பெட்ரோல், டீசல் விலை.
பகிர்:
Updated On : 25 மே 2026, 8:47 am IST

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

Updated On : 25 மே 2026, 9:56 am IST

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

பிரதமர் மோடியின் சமீபத்திய பெங்களூரு வருகையின் போது ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 25 மே 2026, 10:11 am IST

தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை

தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Updated On : 25 மே 2026, 10:24 am IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக திங்கள்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றன.

Advertisement

Advertisement

Updated On : 25 மே 2026, 10:25 am IST

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது சிறுமி - குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 25 மே 2026, 10:26 am IST

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்

கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4ஆவது முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன; லாபத்தை பகிர்ந்துகொள்வத்தில் என தெரிவித்துள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், 2024 ஆம் நிதியாண்டில் ஈட்டிய ரூ.81,000 கோடி லாபம் எங்கே போனது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 25 மே 2026, 10:41 am IST

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

Updated On : 25 மே 2026, 11:00 am IST

விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி

மற்றொரு பொம்மை போல முதல்வர் அரியணையில் அமர்ந்திருக்கும் ஜோசப் விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 25 மே 2026, 11:30 am IST

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம்

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 25 மே 2026, 11:45 am IST

இந்த மலிவான அரசியல் வேண்டாம்: கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

மேக்கேதாட்டு விவகராத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிக்கை விட்டிருந்த நிலையில், இந்த மலிவான அரசியல் வேண்டாம் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.

Updated On : 25 மே 2026, 11:46 am IST

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்கப்போவது எப்போது? - கனிமொழி கேள்வி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்கப்போவது எப்போது? என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 25 மே 2026, 12:12 pm IST

கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவு

Updated On : 25 மே 2026, 12:15 pm IST

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு

தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 25 மே 2026, 1:28 pm IST

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம்

கொடைக்கானலில் இன்று முதல் 31ஆம் தேதி வரை வனத் துறைக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பார்வையிடலாம்.

Updated On : 25 மே 2026, 1:31 pm IST

தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!

தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 மே 2026, 2:21 pm IST

மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசால் மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு, சட்ட நடவடிக்கைகள் விரைவாக எடுக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On : 25 மே 2026, 4:34 pm IST

திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம்

திவிஷா சர்மா மரணத்தில் கணவன் வீட்டார் மீது சந்தேகம் இருப்பதாக புகார் - சிபிஐ விசாரணை

Updated On : 25 மே 2026, 4:58 pm IST

மெட்ரோ ரயிலில் தலைமைச் செயலகத்துக்கு சென்ற தில்லி முதல்வர்!

எரிபொருள் சேமிப்பு திட்டத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக, தில்லி முதல்வர் ரேகா குப்தா, இன்று மெட்ரோ ரயிலில் தலைமைச் செயலகத்துக்கு சென்றுள்ளார்.

Updated On : 25 மே 2026, 5:10 pm IST

ராஜிநாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேரும் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை சந்தித்துப் பேசினர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவரின் முன்னிலையில் முதல்வர் விஜய்யையும் சந்தித்துள்ளனர்.

Updated On : 25 மே 2026, 5:10 pm IST

மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்!

அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தவர்களுக்கு மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை வழங்குவது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் என்றும் இது 100% குதிரை பேரம் எனவும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை விமர்சித்துள்ளார்.

Updated On : 25 மே 2026, 5:47 pm IST

கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை ரூ. 10 உயர்ந்திருக்கும்: நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால், அதன் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்ந்திருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 25 மே 2026, 6:27 pm IST

விவசாயக் கடன் தள்ளுபடி : முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 25) அறிவித்தார்.

இதேபோன்று, சிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

Updated On : 25 மே 2026, 7:29 pm IST

எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரிக்கு பத்ம ஸ்ரீ!

மருத்துவத் துறையில் முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் எழுத்தாளர் சிவசங்கரிக்கு பத்ம ஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (மே 25) வழங்கினார்.

இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜய்குமாருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Updated On : 25 மே 2026, 7:40 pm IST

குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதி: பாஜக புகார்

Updated On : 25 மே 2026, 8:32 pm IST

மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு தோல்வி: கே.சி. வேணுகோபால்

மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு தோல்வியுற்றதாக காங்கிரஸ் பொதுச்செயலரும், மக்களவை எம்.பி.யுமான கே.சி. வேணுகோபால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 25 மே 2026, 8:36 pm IST

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 25 மே 2026, 9:32 pm IST

தேர்தல் முடிந்ததும் மக்கள் பாக்கெட்டுகளைக் காலி செய்வதே பாஜகவின் வாடிக்கை! -பினராயி விஜயன்

summary

உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஏன்? -பினராயி விஜயன்

Updated On : 25 மே 2026, 10:20 pm IST

திமுகவுடன் சேர்வதை விரும்பவில்லை: மரகதம் குமரவேல்

திமுகவுடன் அதிமுக இணைவதை தாங்கள் விரும்பவில்லை என்பதாலும், அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்ததாலும் அக்கட்சியில் இருந்து விலகியதாக மரகதம் குமரவேல் இன்று (மே 25) தெரிவித்தார்.

சுயநலனுக்காக ராஜிநாமா முடிவை எடுக்கவில்லை என்றும், தொகுதி மக்களின் கோரிக்கையை முன்வைத்து ராஜிநாமா நிலைப்பாட்டை எடுத்ததாகவும் விளக்கம் அளித்தனர்.

Updated On : 25 மே 2026, 10:20 pm IST

மு.க. ஸ்டாலின், இபிஎஸ் இணைவார்கள் : ஆதவ் அர்ஜுனா

வரும் தேர்தலில் மு.க. ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் இணைவார்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (மே 25) தெரிவித்தார்.

திமுக - அதிமுக இணைந்து தேர்தல் அரசியலை சந்திப்பார்கள் என்றும், ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தது குதிரை பேரமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

Updated On : 25 மே 2026, 10:21 pm IST

வரி அமைப்பில் மாற்றம்? பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் அரசு கருத்துகேட்பு: நிர்மலா சீதாராமன்

summary

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க அரசு தயார்: நிர்மலா சீதாராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments