சாலைகளில் பறக்கும் ராயல் என்ஃபீல்டின் ஃபிளையிங் ஃப்ளே சி6! விலை?
பெங்களூர் சாலைகளில் ராயல் என்ஃபீல்டின் ஃபிளையிங் ஃப்ளே சி6 மோட்டார்பைக்குள் சீறிப் பறக்கின்றன
ராயல் என்ஃபீல்டின் மின் பைக்குகளான ஃபிளையிங் ஃப்ளே சி6 இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு வழங்கும் விழா பெங்களூரில் இன்று நடைபெற்றது.
ராயல் என்ஃபீல்டின் முதல் மின்னணு மோட்டார்சைக்கிளான ஃபிளையிங் ஃப்ளேவின் விலை 2.79 லட்சம் (எக்ஸ் ஷோரூம்). பாட்டரி சேவை செய்து பெறும் வசதி கொண்ட வாகனங்கள் ரூ.1.99 லட்சம் விலையிலும் கிடைக்கின்றன.
பெங்களூர் நகரம் முழுவதும் சேவை வழங்குவதற்காக, ராயல் என்ஃபீல்டு ஒரு முக்கிய சேவை மையம் மற்றும் அதன் கிளை வலையமைப்பை உருவாக்கியிருக்கிறது. பிடிஎம் லேஅவுட்டில் உள்ள முக்கிய சேவை மையம், சிறப்புச் சேவை வாய்ப்பை நிர்வகிக்கும், அதே நேரத்தில் கிளை மையங்கள் வழக்கமான சேவை மற்றும் பராமரிப்பைக் கையாளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஃபிளையிங் ஃப்ளே சி6, 3.91 கிலோவாட் பாட்டரி திறன் கொண்டுள்ளது; இது 20.65 BHP ஆற்றலையும் 60 Nm திருப்புவிசையையும் (torque) வெளிப்படுத்தும் 'பர்மனன்ட் மேக்னட் சின்க்ரோனஸ் மோட்டாரை' (PMSM) இயக்குகிறது. இந்த பைக் 0 முதல் 60 கி.மீ/மணி வேகத்தை 3.7 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டதுடன், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கி.மீ.
முழு பேட்டரியும் 2 மணி நேரம், 16 நிமிடங்களில் சார்ஜ் செய்யப்படும். 20 சதவிகித சார்ஜ் இருக்கும் நிலையில் 1 மணி நேரத்தில் சார்ஜ் ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Royal Enfield's Flying Flea C6 motorbikes are zooming across the roads of Bengaluru.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.