கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 
வணிகம்

ஹைஃபையான சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக்!

ஹைஃபையான சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் பற்றிய தகவல்கள்..

இணையதளச் செய்திப் பிரிவு

சாம்சங் நிறுவனம், அதன் மிகப் பிரீமியமன ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. சாம்சங் காலக்ஸி வாட்ச் 6 கிளாசிக்தான் அது.

மிக அழகிய நவீனத்துவ வடிவமைப்புடனும், புதிய தொழில்நுட்பங்களுடனும், உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிமுறைகளுடனும் வந்திருப்பதுதான் இந்த கைக்கடிகாரத்தின் கூடுதல் அம்சமே.

இந்த ஸ்மார்ட்வாட்ச், சாம்பிங்கின் வியர் ஓஎஸ் 4-ல் இயங்குகிறது. இதன் பேட்டரி ஆயுள் மிக அதிகம் என்றம், டிஸ்ப்ளே மற்றும் செயல்பாடுகள் மிக நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, மிகச் சிறந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்குவது உங்களது திட்டமாக இருந்தால், சாம்சங் காலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் நல்ல தேர்வாக இருக்கும்.

சிறந்த வடிவமைப்பு..

கைக்கடிகாரத்தின் மேற்புரம் ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் ஆனது. கிளாசிக் ரோட்டேட்டிங் பேஸில் இருப்பதால் பயன்படுத்த எளிது.

1.5 இன்ச் அளவு கொண்டுள்ளது. நல்ல பார்வையான நிறங்களில் வருகிறது.

ஸ்கராட்ச் ஆகாது, உடையாது என நிறுவனம் உறுதி அளிக்கிறது.

அதன் பட்டை, உங்கள் கைக்கு ஏற்றவாறு எளிதாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வசதியுடன் வருகிறது.

எக்ஸிநோ டபிள்யு930 டூயல்-கோர் பிராசஸர் கொண்டிருக்கிறது. 16 ஜிபி சேமிப்புத் தளம் இருப்பதால் செயலிகள், இசையையும் சேமித்துக் கொள்ளலாம்.

சரி முக்கிய விவரத்துக்கு வருவோம்..

இதயத் துடிப்பை கண்காணிக்கும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்கும். இசிஜி பார்த்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தத்தையும் சரி பார்த்துக் கொள்ளலாம். உறக்க நேரத்தை துல்லியமாக சொல்லிவிடுகிறது.

உடற்பயிற்சி செய்வதையும் அதாவது ஓடுவது, யோகா போன்றவற்றையும் கணக்கில் வைத்துக்கொள்ளும். பேட்டரி ஆயுள் சிறப்பாக இருப்பதால் பலரும் விரும்பி வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டோக்கியோவில் பிரதமர் மோடி!

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT