முகப்பு
வணிகம்

3.1 கோடி பதிவிறக்கங்களை கடந்து சாதனை படைத்த ஆதார் செயலி!

அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து மாதங்களுக்குள்ளேயே 3.1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கடந்து சாதனை.

Updated On : 22 ஜூன் 2026, 9:24 pm IST
ஆதார் ஆணையம்
பகிர்:

புதுதில்லி: ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து மாதங்களுக்குள்ளேயே 3.1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கத்தை கடந்துள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

சுமார் 40 லட்சம் பயனர்கள் இந்த புதிய ஆதார் செயலி மூலம் தங்கள் அலைபேசி எண்களைப் புதுப்பித்துள்ளனர். மேலும் 8.5 லட்சம் பேர் தங்கள் முகவரியைப் புதுப்பிக்க இதைப் பயன்படுத்தியுள்ளனர்.

5 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் 3.1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன், இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே இந்த ஆதார் செயலி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சேவைகளை எளிதாகத் தங்கள் விரல் நுனியில் பெறும் வகையில் அமைந்துள்ள இந்தச் செயலியின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதையே இந்த வளர்ச்சி காட்டுகிறதாக யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே நேரடியாக அலைபேசி எண் மற்றும் முகவரியைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த புதிய ஆதார் செயலி வழங்குகிறது.

இந்தச் செயலியில், ஒரே கிளிக்கில் பயோமெட்ரிக் வசதியை பயன்படுத்தும் அங்கீகார பயன்பாடுகள், வருகையை உறுதி செய்வதற்கான முகச் சரிபார்ப்பு மற்றும் கியூஆர் குறியீடு உள்ளிட்ட பல பயனர் நலன் சார்ந்த அம்சங்கள் இதில் உள்ளன.

summary

Aadhaar App Crosses 3.1 Crore Downloads in 5 Months.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments