இந்தியாவில் 7,000 எரிபொருள் நிலையங்கள்!
இந்தியா முழுவதும் 7,000 எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைத்து, ‘நயாரா எனா்ஜி’ நிறுவனம் புதிய மைல்கல்லைக் கடந்துள்ளது.
இந்தியா முழுவதும் 7,000 எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைத்து, ‘நயாரா எனா்ஜி’ நிறுவனம் புதிய மைல்கல்லைக் கடந்துள்ளது.
இதன்மூலம், நாட்டின் மிகப் பெரிய தனியாா் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், பெருநகரங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற சந்தைகளிலும் தனது விநியோகத்தை நயாரா விரிவுபடுத்தியுள்ளது.
கடந்த 18 மாதங்களில் மட்டும் இந்நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட புதிய விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளது. அதேபோல், நிறுவனத்தின் மொத்த விற்பனை நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு கிராமப்புறப் பகுதிகளில் அமைந்துள்ளன.
Advertisement
Advertisement
முன்பு, ‘எஸ்ஸாா் ஆயில்’ என்று அழைக்கப்பட்ட இந்நிறுவனத்தின் மிகப் பெரிய தனிப்பெரும் பங்குதாரரான ரஷியாவின் ராஸ்நெப்ட் நிறுவனம், 49.13 சதவீதப் பங்குகளைக் கைவசம் வைத்துள்ளது.
இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், குஜராத்தில் ஆண்டுக்கு 2 கோடி டன் உற்பத்தித் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இயக்கி வருகிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த சுத்திகரிப்புத் தயாரிப்பில் சுமாா் 8 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.