முகப்பு
வணிகம்

வாட்ஸ்ஆப் வெப்பில் விடியோ கால், குரூப் வாய்ஸ் அம்சங்கள்!

வாட்ஸ்ஆப் வெப் அலுவலக பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் புதிய அப்டேட்டை அறிமுகமாகவுள்ளது குறித்து...

Updated On : 24 ஜூன் 2026, 4:36 pm IST
வாட்ஸ் ஆப் - கோப்புப் படம்
பகிர்:

வாட்ஸ்ஆப் செயலியின் சிறப்பு அம்சமாக வாட்ஸ்ஆப் வெப் உள்ளது. ஸ்மார்ட்போனில் மட்டுமின்றி தொழில்முறை வாட்ஸ்ஆப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் கணினியில் வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதுமே பயனர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 85.3 கோடி பயனர்கள் உள்ளனர்.

இதற்கு போட்டியாக பல செயலிகள் அறிமுகமாகி வந்தாலும், உலகம் முழுக்க உள்ள பயனர்களைத் தக்கவைக்கும் நோக்கத்தில் புதிய அம்சங்களை (அப்டேட்டுகளை) வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்து வருகிறது.

Advertisement

Advertisement

அந்தவகையில் தற்போது வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலான சிறப்பம்சங்களை சேர்க்கும் திட்டத்தில் வாட்ஸ்ஆப் களமிறங்கியுள்ளது. அதாவது குரூப் வாய்ஸ் மெசேஜ் மற்றும் குரூப் விடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்மூலம் கணினியில் வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துவோர் 32 பேருடன் குழு அழைப்பை மேற்கொள்ள முடியும். கால் லிங்க் மற்றும் திரையைப் பகிர்ந்தல் (ஸ்கிரீன் ஷேரிங்) போன்ற அம்சங்களும் அறிமுகமாகவுள்ளன.

அலுவலக தொழில்முறைப் பயன்பாடு கொண்டவர்களுக்கு இந்த புதிய அம்சம் பயனுள்ளதாக இருக்கும் என வாட்ஸ்ஆப் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

summary

Video call and group voice features on WhatsApp Web

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments