முகப்பு
வணிகம்

மெசேஜ்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியுமா? வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்!

வாட்ஸ்ஆப்பில் ஒருமுறை மட்டுமே மெசேஜ்களைப் பார்க்க முடியுமா? என்ற புதிய வசதியைப் பற்றி...

Updated On : 23 ஜூன் 2026, 7:14 pm IST
வாட்ஸ்ஆப் - பிரதிப் படம்
பகிர்:

வாட்ஸ்ஆப் செயலியில் ஒருமுறை மட்டுமே மெசேஜ்களைப் பார்க்க முடியும் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் சோதித்து வருகிறது.

உலகளவில் 330 கோடிக்கும் (3.3 பில்லியன்) அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் செயலி 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

காலங்கள் மாற மாற செயலியில் புதுப்புது அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், நாம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினால் அதனை அவர் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் (வியூ ஒன்ஸ்) என்ற வசதி சோதனையில் உள்ளது.

Advertisement

Advertisement

இவ்வாறு அனுப்பப்படும் செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ அதனை நகல் (காபி) எடுக்கவோ முடியாது. இதன்மூலம் பயனர்களின் தனியுரிமைக் கொள்கை மேம்படும். ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இந்த நடைமுறை, ஏற்கெனவே வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள ஒன்றுதான். ஆனால், அவை புகைப்படங்களுக்கும், விடியோக்களுக்கும் மட்டுமே இருந்து வரும் நிலையில் தற்போது மெசேஜ்களுக்கும் அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும், சோதனை முடிந்த பிறகு விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

WhatsApp is testing a new feature that allows messages to be viewed only once.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments