சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமில்லை!
பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் தொடா்ந்து 9 ஆவது காலாண்டாக மத்திய அரசு எந்தவித மாற்றமின்றி அப்படியே தொடரும் என்றது.
புதுதில்லி: பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் தொடா்ந்து 9 ஆவது காலாண்டாக மத்திய அரசு எந்தவித மாற்றமின்றி அப்படியே தொடரும் என்றது.
அதன் அடிப்படையில், ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கும் 2வது காலாண்டு உள்பட, தொடர்ந்து ஒன்பதாவது காலாண்டாக பிபிஎஃப் (PPF) மற்றும் என்எஸ்சி (NSC) உள்ளிட்ட பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றமின்றி வைத்துள்ளது.
2026-27 நிதியாண்டின் 2வது காலாண்டு, ஜூலை 2026 முதல் செப்டம்பர் 2026 வரையான காலத்துக்கு, சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள், முதல் காலாண்டில் அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களாக தொடரும்.
Advertisement
Advertisement
சுகன்யா சம்ருத்தி திட்டத்தின் கீழ் செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கு 8.2 சதவீதம் வட்டியும், மூன்று ஆண்டு கால வைப்புத் திட்டத்திற்கான வட்டி 7.1 சதவீதமாகவே நீடிக்கும்.
பிபிஎஃப் மற்றும் அஞ்சலக சேமிப்பு வைப்புத் திட்டங்களுக்கான வட்டி 7.1 சதவீதம் மற்றும் 4 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
கிசான் விகாஸ் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும், தேசிய சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.7 சதவீதமாகவே தொடரும்.
தற்போதைய காலாண்டைப் போலவே, 2வது காலாண்டிலும் மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 7.4 சதவீத வட்டி தொடரும்.
இதன் மூலம், சிறு சேமிப்பு திட்டங்கள், குறிப்பாக அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் தொடா்ந்து 9ஆவது காலாண்டாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
The government on Tuesday left interest rates unchanged for various small savings schemes, including PPF and NSC.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.