நடப்பு நிதியாண்டின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்!
நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், இந்தியாவின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்களாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.
புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், இந்தியாவின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்னாக உள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்தது.
அதே வேளையில், 2024-25 நிதியாண்டில், நாட்டின் யூரியா உற்பத்தி 306.67 லட்சம் டன்னாக இருந்தது.
தற்போது, நாட்டில் 33 யூரியா உற்பத்தி ஆலைகள் உள்ள நிலையில், அவற்றின் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் 269.42 லட்சம் டன் என்று ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கடந்த 11 ஆண்டுகளில் யூரியாவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம், 2014-15ல் ஆண்டுக்கு 225 லட்சம் டன்னாக இருந்த யூரியா உற்பத்தியை, 2023-24ல் 314.07 லட்சம் டன் என்ற சாதனை அளவை எட்டியது.
2024-25 நிதியாண்டில், நாட்டில் மொத்தம் 306.67 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யப்பட்டதாக படேல் தெரிவித்தார்.
India's urea production stood at 275.75 lakh tonnes in the first eleven months of this fiscal, the government said on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.