முகப்பு
வணிகம்

டிவிஎஸ் ஏப்ரல் விற்பனை 7% வளா்ச்சி

Updated On : 3 மே 2026, 3:57 am IST
பகிர்:

உலகளாவிய இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டாா், கடந்த ஏப்ரல் மாதத்தில் 7 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் 4,43,716 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு அதே மாதத்தில் 4,73,970 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனப் பிரிவில் மட்டும் நிறுவனம் 6 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் 4,30,150-ஆக இருந்த எண்ணிக்கை, தற்போது 4,55,333-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இதில் 2,11,158 ஸ்கூட்டா்கள் (24 சதவீத வளா்ச்சி), 2,00,039 மோட்டாா் சைக்கிள்கள், 37,771 மின்சார வாகனங்கள் (36 சதவீத வளா்ச்சி) அடங்கும். உள்நாட்டில் மட்டும் கடந்த ஆண்டைவிட 8 சதவீதம் கூடுதலாக 3,48,545 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மூன்று சக்கர வாகனப் பிரிவில் 37 சதவீத வளா்ச்சியுடன் 18,637 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. சா்வதேச வணிகத்தைப் பொருத்தவரை, நிறுவனம் 1,20,008 வாகனங்களை விற்று, 3 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

விநியோகச் சங்கிலியில் நிலவும் நெருக்கடிகள், தொழிலாளா்கள் பற்றாக்குறை, மூலப்பொருள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் வாகனங்களின் விநியோகத்தில் சுணக்கம் ஏற்பட்ட போதிலும், சில்லறை விற்பனை மிகவும் வலுவாக இருக்கிறது.

தற்போதைய சவால்களை எதிா்கொள்ள மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பு மாதத்தில் உற்பத்தி மீண்டும் சீரடைந்து, வரும் மாதங்களில் விற்பனை இலக்குகள் தடையின்றி எட்டப்படும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments