மஹிந்திரா & மஹிந்திரா 4வது காலாண்டு லாபம் 48.5% உயர்வு!
மஹிந்திரா & மஹிந்திரா, மார்ச் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 48.5 சதவீதம் உயர்ந்து ரூ. 5,259.91 கோடியாக உள்ளது.
மும்பை: இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், மார்ச் வரையான காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 48.5% உயர்ந்து ரூ. 5,259.91 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது. இந்த வளர்ச்சிக்கு வாகன மற்றும் விவசாயத் துறைகளே முக்கியக் காரணமாக அமைந்தன.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 3,541.85 கோடியாக இருப்பதாக மஹிந்திரா & மஹிந்திரா தெரிவித்தது.
கடந்த ஆண்டு (2025-26) 4வது காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 54,891.55 கோடியாக இருந்தது. இதுவே 2024-25 நிதியாண்டில், இதே காலகட்டத்தில் இது ரூ. 42,585.67 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் ரூ. 49,615.48 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு இது ரூ. 39,113.61 கோடியாக இருந்தது.
2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 18,621.71 கோடியாக இருந்தது. இதுவே 2025 நிதியாண்டில் பதிவான ரூ. 14,073.17 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 32.32 சதவீதம் அதிகமாகும்.
2026 நிதியாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 1,97,792.78 கோடியாக இருந்தது. இதுவே 2025 நிதியாண்டில் இது ரூ. 1,58,749.75 கோடியாக இருந்தது.
மார்ச் 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான, இறுதி ஈவுத்தொகை தலா ரூ. 5 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 33 வீதம் வழங்குமாறு இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
Mahindra & Mahindra Ltd on reported a 48.5 per cent jump in consolidated profit after tax to Rs 5,259.91 crore during the March quarter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.