எல்&டி 4வது காலாண்டு லாபம் 3% சரிவு!
எல்&டி - மார்ச் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 3 சதவீதம் சரிவு ஏற்பட்டு ரூ.5,326 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
புதுதில்லி: லார்சன் & டூப்ரோ நிறுவனம், மார்ச் வரையான காலாண்டுக்கான (2026 நிதியாண்டு) ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 3 சதவீதம் சரிவு ஏற்பட்டு ரூ.5,326 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ.5,497 கோடி லாபத்தைப் ஈட்டியிருந்தது.
எனினும், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், செயல்பாடுகள் வாயிலான வருவாய் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 74,392 கோடியிலிருந்து 11 சதவீதம் உயர்ந்து ரூ. 82,762 கோடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதற்கிடையில், நபா பவர் லிமிடெட் மற்றும் எல்&டி மெட்ரோ ரயில் (ஹைதராபாத்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் தனக்குள்ள முழுப் பங்கு உரிமையையும் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களை, இந்த ஆண்டு எல்&டி மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.என். சுப்ரமணியன் தெரிவித்தார்.
மார்ச் 2026 நிலவரப்படி, இக்குழுமத்தின் ஒருங்கிணைந்த பணி ஆணைகள் கையிருப்பு ரூ.7,40,327 கோடி என்ற உச்சத்தை எட்டியது. இது மார்ச் 2025ஐ ஒப்பிடுகையில் 28 சதவீத வளர்ச்சியாகும்.
2026 நிதியாண்டிற்காக, இறுதி ஈவுத்தொகையை, பங்கு ஒன்றுக்கு ரூ.38 வீதம் வழங்குமாறு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
L&T reported a 3 per cent drop in consolidated profit after tax at Rs 5,326 crore for March quarter FY26.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.