எஸ்எம்எல் மஹிந்திராவின் Q2 லாபம் 44% சரிவு!
எஸ்எம்எல் இசுசு என அறியப்பட்ட எஸ்எம்எல் மஹிந்திரா, 2வது காலாண்டில் அதன் நிகர லாபம் 44.4 சதவீதம் சரிந்து ரூ. 11.70 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
புதுதில்லி: எஸ்எம்எல் இசுசு என அறியப்பட்ட எஸ்எம்எல் மஹிந்திரா, 2வது காலாண்டில், அதன் நிகர லாபம் 44.4 சதவீதம் சரிந்து ரூ. 11.70 கோடியாக இருப்பதாக அறிவித்தது. இதுவே கடந்த ஆண்டின் அதே காலாண்டில், நிறுவனம் ரூ. 21.05 கோடி லாபம் ஈட்டியிருந்தது.
செயல்பாடு மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% அதிகரித்து ரூ. 669.79 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
மூலப்பொருட்களின் செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.8 சதவீதம் அதிகரித்து ரூ. 523.34 கோடியாக உயர்ந்ததால், இந்த காலாண்டில் மொத்தச் செலவு கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலிருந்த ரூ. 528.95 கோடியிலிருந்து, கிட்டத்தட்ட 24 சதவீதம் அதிகரித்து ரூ. 655.54 கோடியாக உள்ளது.
Advertisement
Advertisement
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், 2025 ஆம் ஆண்டில் சுமிடோமோ கார்ப்பரேஷன் மற்றும் இசுசு மோட்டார்ஸ் நிறுவனங்களிடமிருந்து எஸ்.எம்.எல் மஹிந்திராவின் 58.97 சதவீதப் பங்குகளைக் கையகப்படுத்தியது.
சமீபத்தில், மஹிந்திரா & மஹிந்திரா மறுசீரமைப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன் கீழ், அது தனது டிரக்குகள் மற்றும் பேருந்துப் பிரிவை ரூ. 525 கோடிக்கு எஸ்.எம்.எல் மஹிந்திராவுக்கு மாற்றம் செய்த நிலையில், இந்தப் பரிவர்த்தனையை ஜனவரி 2027 அல்லது அதற்கு முன் நிறைவடையும் என்றது.
SML Mahindra, on Monday reported 44.4 decline in net profit for the September quarter at Rs 11.70 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.