முகப்பு
வணிகம்

தொடர் சரிவில் இந்திய ரூபாய்: 1 டாலர் - ரூ. 95.86! 22 காசுகள் சரிவு!

இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 96 என்ற குறியீட்டிற்குக் கீழே சரிந்து, பிறகு ரூ. 95.86 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச அளவில் நிலைபெற்றது.

- PTI Graphics
பகிர்:

மும்பை: தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பணவீக்கம் குறித்த அச்சம் உள்ளிட்டவையால், ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்து. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 96 என்ற குறியீட்டிற்குக் கீழே சரிந்து, பிறகு ரூ. 95.86 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச அளவில் நிறவடைந்தன.

இந்த ஆண்டில் இதுவரை ரூபாய் 6 சதவீதத்திற்கும் அதிகமாக சந்தித்துள்ளது. போர் அபாயம் அதிகரித்ததால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், கடந்த ஆறு வர்த்தக அமர்வுகளில் அதன் மதிப்பு கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைந்துள்ளது. வலுவான சில்லறை விற்பனை மற்றும் நிலையான தொழிலாளர் சந்தை தரவுகள் உள்ளிட்டவையால், பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கடுமையாகக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் குறைத்ததைத் தொடர்ந்து டாலர் குறியீடு மேல்நோக்கி சென்றது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 95.86 ஆக தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் ரூ. 96.14 என்ற வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது. இது அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 50 காசுகள் வீழ்ச்சியைப் பதிவு செய்த நிலையில், ரிசர்வ் வங்கியின் தலையீட்டால், வர்த்தகத்தின் இறுதியில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 95.86 ஆக நிலைபெற்று, அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 22 காசுகள் இழப்பை பதிவு செய்தது.

Advertisement

Advertisement

நேற்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.96 என்ற புதிய வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது. பிறகு டாலருக்கு நிகரான 2 காசுகள் உயர்ந்து சிறிதளவு ஆதாயத்துடன் ரூ. 95.64 ஆக நிறைவடைந்தது.

summary

Rupee crashed below the 96/USD mark on Friday before closing at an all-time low of 95.86 against the US dollar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments