கடலைப் பருப்பு புட்டு
கடலை மாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
தேவையானவை:
கடலை பருப்பு - 2 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1கிண்ணம்
நெய், ஏலக்காய், முந்திரி,
திராட்சை - தலா 1 கிண்ணம்
செய்முறை:
கடலைப் பருப்பை ஊறவைத்து பின்பு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் நெய் விட்டு அதில் முந்திரி மற்றும் திராட்சையை வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.
பின்னர், அதே நெய்யில் கடலை மாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்பு, கடலை பருப்பு கலவை ஆறியவுடன் அதில் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலக்காய், முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கடலைப் பருப்பு புட்டு தயார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.