மின் துறையில் இந்த ஆண்டு 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல்குமார்
மின் துறையில் இந்த ஆண்டு புதிதாக 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளோம் என்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மின் துறையில் இந்த ஆண்டு புதிதாக 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளோம் என்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை அவனியாபுரத்தில் அவர் அளித்த பேட்டியில், மின்சாரத் துறை தரப்பில் வெள்ளை அறிக்கை வரும் வாரம் இறுதிக்குள் வெளியிடப்படும். இந்தத் துறையின் நிலை என்ன? எந்தெந்த வகையில் நஷ்டம் ஏற்பட்டது, எந்தெந்த இடங்களில் ஊழல் நடந்தது என்று வெளியிடுவோம். பல வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் உத்தமர் செந்தில் பாலாஜி. கடந்த 10 வருடங்களில் பாலாஜி பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. எந்த வழக்கு என்ன என்று தெரியவில்லை அந்தந்த துறைகளுக்குத்தான் தெரியும்.
இந்த ஆண்டு புதிதாக 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளோம். பழைய ஆட்சியில் உத்தரவாதம் கொடுத்தவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. மின்சார துறையை முழுவதுமாக சீரமைக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 ஆயிரம் பேர்களை வேலைக்கு எடுக்கும் கட்டாயத்தில் உள்ளோம். குற்ற சம்பவங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முந்தயை ஆட்சியில் குற்ற சம்பவங்கள் மறைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
மூடி மறைக்கும் வேலையில் தற்போதைய அரசு ஈடுபட்டது. இந்த ஆட்சியில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ரிசல்ட் கூடிய விரைவில் பார்ப்பீர்கள். மின்தடை எதற்காக தடை ஏற்படுகிறது எதனால் ஏற்படுகிறது என்று மின்சாரத் துறை சார்பாக அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. முன்னர் மின்சாரத் துறையில் பொதுமக்களுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை என்றார்கள்.
ஆனால் இப்போது மக்கள் வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறோம். டிரான்ஸ்பார்மர் ஊழல் சிபிஐ விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணத்தை திருடியவர்கள் அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
Electricity and Law Minister Nirmal Kumar has stated that they have decided to provide new employment opportunities to 15,000 people in the electricity department this year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.