சென்னையில் மின்வெட்டு ஏன்? திமுக - அதிமுக கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள் இவர்கள்தான்!
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேட்டி
திமுக, அதிமுக கூட்டணி ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருப்பார்கள் என நினைப்பதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னையில் அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"சென்னையில் நகருக்குள் நடக்கும் மின்வெட்டுக்கு கேபிள் வயர் துண்டிக்கப்படுவதால் நடக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி ஊழியர்களால் நடக்கும் பணிகளால் மின் வயர் கட் ஆகிறது. அதனால் மின்வெட்டு ஏற்படுகிறது. பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. புகார்கள் வந்தால் உடனடியாக சரிசெய்கிறோம். கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை அதிகரிக்கிறது. அதனால் மின் தேவையும் அதிகரித்திருக்கிறது. சிறிய சிறிய இடையூறுதான் இருக்கிறது.
Advertisement
Advertisement
திமுக, அதிமுக கூட்டணி ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப் போகிறார்கள் என்று நினைக்கிறேன். தென் மாவட்டங்களில் அதிமுக என்ற கட்சியே இல்லாத நிலைதான் இருக்கிறது. (திமுக தலைவர் ஸ்டாலின் கோபப்பட்டால் ஆட்சியே மாறிவிடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது).
குதிரை பேரத்தில் யார் மாற்றியிருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுத்து எம்எல்ஏக்களை வாங்கினால்தான் அது குதிரை பேரம். சிலர் தலைமையை ஏற்க முடியாமல் ராஜிநாமா செய்துவிட்டு வருகிறார்கள் என்றால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. திசைதிருப்பும் வேலையாக ஆளுநரிடம் திமுக மனு அளித்துள்ளது.
அரசு வழக்கறிஞர் நியமனம் 80% பணிகள் முடிந்துவிட்டன. ஒரு சில மாவட்டங்களில் நிலுவையில் உள்ளது. அது விரைவில் நிரப்பப்படும். விரைவில் துணைவேந்தர் நியமனம் நடைபெறும்" என்றார்.
Why are there power cuts in Chennai? Nirmal Kumar explains
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.