சுகாதாரக்கேட்டால் அவதி
கிண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைக்
கிண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் சரிவர அப்புறப்படுத்துவதில்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் நிலவுகிறது.
மேலும், கட்டுமான கழிவுகளை சாலையோரங்களில் கொட்டிச் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.