மழை நீர் வடிகால், சாலை வசதி வேண்டும்
விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை சாலை கெங்கையம்மன் ஆலையம் முதல் இந்து மயான பூமி நுழைவு வாயில் வரை மழைநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை சாலை கெங்கையம்மன் ஆலையம் முதல் இந்து மயான பூமி நுழைவு வாயில் வரை மழைநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கடந்த மாதம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டதால் அந்த இடங்களில் பெரும் பள்ளங்களாக உள்ளன. சிறிது மழை பெய்தாலே சாலையில் மழை நீரும் கழிவு நீரும் சேர்ந்து அந்தப் பகுதி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் கொசுத்தொல்லை, துர்நாற்றம் போன்றவற்றால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே இந்தப் பகுதியில் மழை நீர் வடிகால் அமைத்து சாலைகளையும் விரிவாக்கம் செய்ய வேண்டும்..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.