கூடுதல் பேருந்துகள் தேவை
திண்டியிலிருந்து சைதாப்பேட்டை, மயிலாப்பூர் வழியாக அண்ணா சதுக்கம் வரை இயக்கப்படும் தடம் எண். 45பி மற்றும் வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மியூசிக் அகாடமி வழியாக அண்ணா சதுக்கம் வரை செல்லும் தடம் எண். 45ஏ ஆகிய பேருந்துகளில் எந்த நேரமும் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
திண்டியிலிருந்து சைதாப்பேட்டை, மயிலாப்பூர் வழியாக அண்ணா சதுக்கம் வரை இயக்கப்படும் தடம் எண். 45பி மற்றும் வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மியூசிக் அகாடமி வழியாக அண்ணா சதுக்கம் வரை செல்லும் தடம் எண். 45ஏ ஆகிய பேருந்துகளில் எந்த நேரமும் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பேருந்துக்குள் நிற்கக்கூட இடம் இல்லாமல், பலர் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த இரு வழித் தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.