ஆபத்தான வேகத்தடை!
ஆவடி, புதிய ராணுவச் சாலை, ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள பிரபல உணவகம் எதிரே வேகத்தடை போடப்பட்டுள்ளது.
ஆவடி, புதிய ராணுவச் சாலை, ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள பிரபல உணவகம் எதிரே வேகத்தடை போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வேகத்தடை சாலை நீளத்துக்கு முழுமையாக போடப்படாமல் பாதியளவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடையை தவிர்த்து சாலையின் வலதுபுறம் செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, ஆபத்தான இந்த வேகத்தடை அகற்றி, பொதுமக்களின் உயிரை காக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.