Year Ender

மறைவுகள்... 2025

இந்திய அணு ஆயுதத் திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஆர்.சிதம்பரம் (88), மும்பையில் காலமானார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜனவரி

4: இந்திய அணு ஆயுதத் திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஆர்.சிதம்பரம் (88), மும்பையில் காலமானார்.

25: இந்தியாவில் இதய பைபாஸ் சிகிச்சையை முதன் முதலில் மேற்கொண்டு சாதனை படைத்த டாக்டர் கே.எம்.செரியன் (82), பெங்களூரில் காலமானார். மருத்துவத் துறையில் இவர் செய்த சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பிப்ரவரி

1: இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான நவீன் சாவ்லா (79), தில்லியில் காலமானார்.

4: தமிழ் திரைத்துறையின் பழம்பெரும் நடிகையான புஷ்பலதா (87), சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். 1950-60-களில் பல முக்கிய திரைப்படங்களில் நடித்தவர்.

மார்ச்

25: இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் (48), மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஏப்ரல்

8: காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தன் (92), வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாகக் காலமானார்.

13. தயாரிப்பாளர் கலைப்புலி ஜி. சேகரன் காலமானார்.

15. இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி காலமானார்.

21: ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதய செயலிழப்பால் உயிரிழந்தார்.

25: இஸ்ரோவின் முன்னாள் தலைவரான கே.கஸ்தூரிரங்கன் (84), பெங்களூரில் வயது மூப்பு காரணமாக காலமானார். பத்ம விபூஷண் விருது பெற்ற இவர், இந்திய விண்வெளித் திட்ட வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார்.

மே

10. நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்.

20: இந்தியாவின் அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவரான எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் (88), உதகையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

28. நடிகர் ராஜேஷ் காலமானார்.

ஜூன்

2 இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்.

11 நடிகர் டெலிபோன் சுப்பிரமணி காலமானார்.

ஜூலை

3: போர்ச்சுகலைச் சேர்ந்த கால்பந்து வீரரான டியேகோ ஜோடா (28) மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா ஆகியோர் கார் விபத்தில் உயிரிழந்தனர். விபத்து நிகழ்வதற்கு சில வாரங்கள் முன்புதான் அவருக்குத் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

13: தமிழ், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பாஜகவின் முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83), வயது மூப்பு காரணமாக ஹைதராபாதில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

14: தமிழ் திரையுலகில் "கன்னடத்துப் பைங்கிளி' என்று அழைக்கப்புட்ட பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவி (87), உடல்நலக் குறைவால் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

18. இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்.

19: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து (77), சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

ஆகஸ்ட்

2: நகைச்சுவை நடிகரும் சின்னத்திரை தொகுப்பாளருமான மதன் பாப் (71), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

15: நாகாலாந்து ஆளுநரும், பாஜகவின் இலக்கிய முகமாகத் திகழ்ந்தவருமான இல.கணேசன் (80), உடல்நலக் குறைவால் காலமானார்.

30. இயக்குநர் எஸ். என். சக்திவேல் காலமானார்.

செப்டம்பர்

5. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்.

13: மேகாலய அரசியலின் முக்கிய ஆளுமையும், 4 முறை மாநிலத்தின் முதல்வராகவும் இருந்த டி.டி.லபாங் (91), வயது மூப்பு காரணமாக காலமானார்.

18. நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.

அக்டோபர்

10: சமையலறை சாதனங்கள் துறையின் ஜாம்பவான் என்று பரவலாக அறியப்படும் பிரெஸ்டிஜ் நிறுவனத்தின் கெளரவத் தலைவரான டி.டி.ஜெகந்நாதன் (77), உடல் நலக்குறைவால் பெங்களூரில் காலமானார்.

11 ஒளிப்பதிவாளர் பாபு காலமானார்.

23: நாமக்கல் மாவட்டம் செந்தமங்கலம் தொகுதி (பழங்குடியினர்) திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி (74) மாரடைப்பால் உயிரிழந்தார்.

23 இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்.

23 நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி காலமானார்.

நவம்பர்

4: வணிக உலகில் "ஜிபி' என்று அழைக்கப்படுபவரும், உலகளவில் புகழ்பெற்ற ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான கோபிசந்த் ஹிந்துஜா (85), உடல் நலக்குறைவால் காலமானார்.

10. நடிகர் அபினய் காலமானார்.

14. இயக்குநர் வி. சேகர் காலமானார்.

24: "சத்யகாம்', "ஷோலே' உள்பட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, ஹிந்தி திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த நடிகர் தர்மேந்திரா (89), மும்பையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

டிசம்பர்

4: "ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்' நிறுவனர் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் மகனும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவி.எம். சரவணன் (86), உடல்நலக் குறைவால் காலமானார்.

20: மலையாள திரையுலகின் மூத்த நடிகரும், புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநருமான ஸ்ரீநிவாசன் (75), உடல்நலக் குறைவால் கொச்சியில் காலமானார்.

29 ஆவணப்பட இயக்குநர் கிருஷ்ணசாமி காலமானார்.

30. வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவருமான கலீதா ஜியா (80) காலமானார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய இவர் மூன்றுமுறை அப்பதவியை வகித்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர் எல்லார்க்கும் எல்லாம்

SCROLL FOR NEXT