பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார்
பாலிவுட்டில் பழம்பெரும் நடிகரான பாரத் கபூர் உடல்நலக் குறைவால் இன்று (ஏப். 27) காலமானார்...
பாலிவுட்டில் பழம்பெரும் நடிகரான பாரத் கபூர் உடல்நலக் குறைவால் இன்று (ஏப். 27) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 80.
பாலிவுட்டில் 4 தலைமுறைகளுக்கும் மேலாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பாரத் கபூர். இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவரின் உயிர் பிரிந்தது. இதனை பாரத் கபூரின் நண்பரும் நடிகருமான அவ்தார் கில் உறுதிப்படுத்தினார். இவரின் இறுதிச் சடங்கு மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
பாலிவுட்டில் 1972-ஆம் ஆண்டு அறிமுகமாகி, சுமார் நான்கு தலைமுறைகளாக ஹிந்தித் திரைப்படங்களில் நடித்துவந்தார்.
துணை வேடங்கள், வில்லன் மற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்து பலரைக் கவர்ந்துள்ளார். நூரி, ராம் பல்ராம், லவ் ஸ்டோரி, சத்தியமேவ் ஜெயதே போன்ற பல படங்களில் பாரத் கபூர் நடித்துள்ளார்.