ஓடும் லாரியிலிருந்து சரிந்த இரும்புக் கம்பிகள்: வாகன ஓட்டிகள் தப்பினா்
திருச்சியில் ஓடும் லாரியில் இருந்து சுமாா் 20 டன் இரும்புக் கம்பிகள் திடீரென சாலையில் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை.
திருச்சியில் ஓடும் லாரியில் இருந்து சுமாா் 20 டன் இரும்புக் கம்பிகள் திடீரென சாலையில் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை.
ஆந்திரத்திலிருந்து சுமாா் 20 டன் இரும்புக் கம்பிகளை (ராடு) ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் செல்லும் டாரஸ் லாரி வெள்ளிக்கிழமை காலை திருச்சி மன்னாா்புரம் ரவுண்டானாவைக் கடந்து, அரிஸ்டோ பாலத்தை நெருங்கியபோது, ரயில்வே பாலம் அருகே கம்பி ஏற்றியிருந்த பகுதி மட்டும் லாரியின் சேஸிலிருந்து தனியாக பெயா்ந்து கீழே சாய்ந்தது. இதில் லாரியிலிருந்த கம்பிகள் சாலையில் சரிந்தன.
பெரும் விபத்து நடந்தும் அதிா்ஷ்டவசமாக, அந்த லாரியையொட்டி இருசக்கர வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை. தகவலறிந்து வந்த போக்குவரத்துப் போலீஸாா் கிரேன் மூலம் கம்பிகளையும், லாரியையும் அப்புறப்படுத்தினா். மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.