அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இழக்க காரணம் இதுதான்: பயிற்சியாளர்
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக இழந்ததற்கான காரணத்தை இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக இழந்ததற்கான காரணத்தை இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. தொடரின் முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்த அயர்லாந்து அணி, இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மேலும், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும், அயர்லாந்து ஆடுகளங்களின் தன்மையை புரிந்துகொள்ள தவறிவிட்டதாகவும் இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின், அயர்லாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஏற்பட்ட தோல்வி மிகுந்த ஏமாற்றமளிப்பதாக நினைக்கிறேன். அயர்லாந்து அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றிவிட்டார்கள். அவர்களை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.
அயர்லாந்து ஆடுகளங்களின் தன்மையை புரிந்துகொள்ள தவறிவிட்டோம். இந்த தொடரை இழந்ததன் மூலம், மிகப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளோம். ஆடுகளங்களின் தன்மை என்பது வெற்றி பெறுவதற்கு மிகப் பெரிய காரணி. அதனை நாங்கள சரியாக கணிக்கவில்லை. அதேபோல, காற்றும் போட்டியின் வெற்றி, தோல்வியில் மிக முக்கிய காரணியாக இருந்தது. ஆனால், தோல்விக்கு எந்தவொரு காரணங்களும் கூறக் கூடாது. அயர்லாந்து அணி நன்றாக விளையாடினார்கள். அவர்களுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டோம் என்றார்.
Indian team assistant coach Ryan ten Doeschate has revealed the reason for the complete loss of the T20 series against Ireland.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.