FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தோல்வி எதிரொலி... தலைமைப் பயிற்சியாளரை நீக்கியது மான்செஸ்டர் யுனைடெட் அணி!

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக்கேல் கேரிக் நீக்கப்பட்டது குறித்து...

தலைமைப் பயிற்சியாளர் மைக்கேல் கேரிக் - AFP
பகிர்:

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக்கேல் கேரிக் நீக்கப்பட்டுள்ளார். தொடர் தோல்வியினால் நிர்வாகம் இந்த முடிவினை எடுத்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிகமுறை (13) கோப்பை வென்று வரலாறு படைத்துள்ளது. ஆனால், சமீபகாலமாக மிக மோசமாக விளையாடி வருகிறது.

Advertisement

Advertisement

கடைசியாக 2012–13 சீசனில் சர் அலெக்ஸ் பெர்குசனின் கடைசி போட்டியில் இந்த அணி பிரீமியர் லீக்கை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, 14 ஆண்டுகளாக கோப்பையின்றி சொதப்பி வருகிறது.

மைக்கேல் கேரிக் கடந்த ஜன.13ல் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். யுனைடெட் அணி சாம்பியன்ஸ் லீக்கிற்கும் தேர்வானது.

கடந்த மே மாதம் மைக்கேல் கேரிக் 2028 வரைக்கும் தொடர்வார் என ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், தொடர்ச்சியான தோல்விகளால், அவர் நீக்கப்பட்டுள்ளார்.

மைக்கேல் கேரிக் பயிற்சியாளராக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் 32 போட்டிகளில் 15 வெற்றிகள், 8 டிரா, 9 தோல்விகளைப் பெற்றுள்ளார். வெற்றியின் சதவிகிதம் 46.8ஆக இருந்தது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய பயிற்சியாளராக அமெரிக்க கால்பந்தின் பயிற்சியாளராக இருந்த மௌரிசியோ பொச்செட்டினோ நியமிக்கப்படவிருக்கிறார்.

summary

Manchester United sack coach Michael Carrick with immediate effect

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.