FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்றுக் கொள்கிறேன்: கௌதம் கம்பீர்

தன்னுடைய இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளர் பொறுப்பில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

24 செப்டம்பர் 2026, 8:34 pm IST
கௌதம் கம்பீர்
பகிர்:

தன்னுடைய இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளர் பொறுப்பில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அதன் சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அணியை வழிநடத்துவது குறித்து கௌதம் கம்பீர் மனம் திறந்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்த இரண்டு ஆண்டுகள் கண் இமைக்கும் நேரத்தில் கடந்துவிடவில்லை. எனக்கு இந்த இரண்டு ஆண்டு காலத்தில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் இருந்ததாக நினைக்கிறேன். எனக்கென தனிப்பட்ட தோல்விகள் மற்றும் வெற்றிகள் இருக்கின்றன. ஆனால், மிகப் பெரிய பொறுப்பினை எடுத்துக் கொள்ளும்போது ஏற்ற, இறக்கங்கள் இருக்கும்.

அதனால், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எந்த வடிவிலான கிரிக்கெட்டாக இருந்தாலும் எனக்கு கிடைத்த வெற்றிகளை நினைத்து எப்போதும் மகிழ்ச்சியடைவேன். ஆனால், எனக்கு தோல்விகளும் உள்ளன. வெற்றி, தோல்வி இரண்டையுமே நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

summary

Indian team head coach Gautam Gambhir has stated that he has experienced many ups and downs during his two-year tenure as coach.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments