FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இது கிரிக்கெட் கிடையாது, வெறும் பேட்டிங் மட்டுமே: கௌதம் கம்பீர்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான ஆடுகளம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கௌதம் கம்பீர் - ICC
பகிர்:

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான ஆடுகளம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குவாஹாட்டியில் நேற்று (செப்டம்பர் 30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 406 ரன்கள் என்ற கடினமான இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்ற பார்சபரா திடலின் ஃபிளாட் ஆடுகளம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இன்னும் அதிகமான போட்டி இருந்திருக்க வேண்டும். இது கிரிக்கெட் கிடையாது, வெறும் பேட்டிங் மட்டுமே. இளம் வீரர் ஒருவர் இந்த ஆடுகளத்தில் பந்துவீசுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள். எதிரணி 400 ரன்கள் எடுக்கிறார்கள், நாங்கள் 400 ரன்களை சேஸ் செய்கிறோம். சாதனைகள், ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு எல்லாம் சரிதான். ஆனால், நேர்மையான கிரிக்கெட் ரசிகனாகவும், பயிற்சியாளராகவும் என்னைக் கேட்டால் இதனைக் கிரிக்கெட் எனக் கூறமாட்டேன். ஏனெனில், பந்துவீச்சாளர்கள் தரப்பிலிருந்தும் நான் யோசிக்க வேண்டும்.

இந்த மாதிரியான ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு நியாயமானதாக இல்லை. ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கும் உதவுபவையாக இருக்க வேண்டும். நீங்கள் பந்துவீச்சாளர்கள் மீது கோபப்பட முடியாது. அவர்கள் அதிக ரன்கள் வழங்கியதால் மட்டுமே மோசமாக பந்துவீசியுள்ளார்கள் எனக் கூற முடியாது. ஐந்து வீரர்கள் உள்புற வட்டத்துக்குள் நிற்க வேண்டும், பவர்பிளே, இரண்டு புதிய பந்துகள் இவையெல்லாம், பந்துவீச்சாளர்களுக்கான தெரிவுகளை குறைக்கின்றன என்றார்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஒரு இரட்டைச் சதம் மற்றும் நான்கு சதங்கள் விளாசப்பட்டன. இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டைச் சதம் விளாசிய நிலையில், ரோஹித் சர்மா, ஜான் கேம்பெல், சாய் ஹோப் மற்றும் அமிர் ஜாங்கோ சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

summary

Indian team head coach Gautam Gambhir has sharply criticized the pitch for the second ODI between India and the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments