ஒருநாள் தொடரை வென்றதில் இந்திய அணியைக் காட்டிலும் கம்பீர் மகிழ்ச்சியாக இருப்பார்; ஏன் தெரியுமா?
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதில் இந்திய அணியைக் காட்டிலும் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதில் இந்திய அணியைக் காட்டிலும் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒருநாள் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
பே ஓவலில் இன்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகனாகவும், குர்னூர் பிரார் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஒருநாள் தொடரை வென்றதில் இந்திய அணியைக் காட்டிலும் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார். அதற்கு காரணம், வெளிநாடுகளில் நடைபெறும் ஒருநாள் தொடர்களில் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணிக்கு கிடைக்கும் முதல் வெற்றி இதுவாகும்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அதன் பின், இந்திய அணி இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இருப்பினும், இந்தத் தொடர்கள் எதையும் இந்திய அணி வெல்லவில்லை. அவரது தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்றிருந்தாலும், வெளிநாடுகளில் ஒருநாள் தொடரை வென்றதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்தது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் வெளிநாடுகளில் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றதில்லை என்ற விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.