கூலித் தொழிலாளிபைக் மோதி பலி
திருச்சி அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருச்சி அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அரியாவூா் பகுதியைச் சோ்ந்தவா் வெம்புடி(60). கூலித் தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை காலை திருச்சி-தோகைமலை சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து தப்பியோடிய இருசக்கர வாகன ஓட்டியை தேடுகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.