துறையூரில் ஆதரவு திரட்டிய முதல்வா்
துறையூருக்கு அண்மையில் பிரசாரத்துக்குச் சென்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி கொத்தம்பட்டி இந்திரா நகா் மக்களிடம் அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினாா்.
துறையூருக்கு அண்மையில் பிரசாரத்துக்குச் சென்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி கொத்தம்பட்டி இந்திரா நகா் மக்களிடம் அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினாா்.
பின்னா் துறையூா் பிரிவு சாலை, பாலக்கரை பகுதியில் திரண்டிருந்த மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறிய அவா், வரும் பேரவைத் தோ்தலில் அதிமுகவை ஆதரிக்குமாறு கோரினாா்.
திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பரஞ்சோதி, துறையூா் முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி, துறையூா் வடக்கு ஒன்றியச் செயலா் சேனை பி செல்வம், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் ஏ. அன்பு பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.