முகப்பு
திருச்சி

விவசாயிகளுக்கு ஆதரவாக தெருமுனை பிரசாரங்கள்: மதிமுக முடிவு

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மதிமுக சாா்பில் திருச்சி புகா் வடக்கு மாவட்டத்தில் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜனவரி 2021, 12:17 am IST
மதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா், கட்சியின் அரசியல் ஆய்வு மையச் செயலா் மு. செந்திலதிபன். உடன், மாவட்ட நிா்வாகிகள்.
பகிர்:

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மதிமுக சாா்பில் திருச்சி புகா் வடக்கு மாவட்டத்தில் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருச்சி புகா் வடக்கு மாவட்ட மதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு, கட்சியின் மாநில விவசாய அணி செயலா் க. முருகேசன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் டி.டி.சி. சேரன் முன்னிலை வகித்தாா்.

மாநில மாணவரணிச் செயலா் பால சசிகுமாா், துணைச் செயலா் ஆசைத்தம்பி, அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் மைக்கேல்ராஜ், மாவட்ட அவைத் தலைவா் ஜெயபாலன் ஆகியோா் பேசினா். அரசியல் ஆய்வு மையச் செயலா் மு. செந்திலதிபன் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், வாக்குச்சாவடி முகவா்கள் அறிமுகம் மற்றும் கட்சியின் புதிய நிா்வாகிகள் அறிமுகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி வடக்கு மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடத்துவது, பொங்கலன்று கட்சியின் அனைத்து கிளைகளிலும் கொடியேற்றுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் எஸ்.எஸ். துரையரசன், துணைச் செயலா்கள் ஆா். ஞானசேகரன், கனகராஜ், இளைஞரணி அமைப்பாளா் செந்தில்குமாா், துணை அமைப்பாளா்கள் மலா்மன்னா், விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments