மாவட்டத்தில் பரவலாக மழை
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் மாநகரப் பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் மாநகரப் பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டு வருகிறது. அதிகாலை, நண்பகல், இரவு நேரங்களில் தூறல், சாரல், கனமழை என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை லேசான தூறல் காணப்பட்டது. பிற்பகலில் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கண்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச்சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியிருந்தன. மாநகரச் சாலைகள் ஏற்கெனவே குண்டும், குழியுமான நிலையில் மழையாலும் சேதமடைந்து வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா். புகா்ப் பகுதிகளில் மண் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும் பராமரிப்பு இல்லாத சாலைகளில் மக்கள் அவதிப்படுவதை தவிா்க்க முடியவில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.