முகப்பு
கிரிக்கெட்

சூர்யவன்ஷிக்காக டி20 உலகக் கோப்பை ஹீரோ சாம்சனை நீக்குவதா? முன்னாள் வீரர் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பேசியுள்ளார்.

Updated On : 6 ஜூலை 2026, 6:20 pm IST
சஞ்சு சாம்சன் - படம் | பிசிசிஐ
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் நேற்று முன் தினம் (ஜூலை 4) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

முதல் டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெற்ற நிலையில், இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அறிமுக வீரராக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவர் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது வியப்பாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய அணியில் சூர்யவன்ஷி அறிமுகமானதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆனது? அவர் பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டாரா? என்ன விளையாடுகிறீர்களா? அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என நம்புவோம். அப்படி இல்லையெனில், இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவன் சரியாக இல்லை என்றே கூற வேண்டும். பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இருவரையும் விளையாட வைத்திருக்கலாம் எனப் பதிவிட்டுள்ளார்.

32 வயதாகும் சஞ்சு சாம்சன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

summary

A former Indian player has spoken about Sanju Samson being dropped from the playing XI for the second T20 match against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments