முகப்பு
திருச்சி

இருங்களூரில் அடா்வனக் காடு:3 ஆயிரம் மரக்கன்றுகள் நடல்

திருச்சி புனித சிலுவைக் கல்லூரி சாா்பில் இருங்களூா் அடா்வனக் காடு அமைக்க 3 ஆயிரம் மரக்கன்று நடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 12:13 am IST
பகிர்:

திருச்சி: திருச்சி புனித சிலுவைக் கல்லூரி சாா்பில் இருங்களூா் அடா்வனக் காடு அமைக்க 3 ஆயிரம் மரக்கன்று நடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள இருங்களூா் ஊராட்சியில் அடா்வனக்காடு எனப்படும் மியவாக்கி காட்டை உருவாக்க 2 லட்சம் மரக்கன்று நடும் பணி நடைபெறுகிறது.

இதையறிந்த திருச்சி புனித சிலுவைக் கல்லூரி ரெஸ்கேல்ஸ் கிராமப்புற மேம்பாடு அமைப்பு மூலம் 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட முடிவு செய்தனா்.

Advertisement

Advertisement

அதன்படி கல்லூரி முதல்வா் கிறிஸ்டினா பிரிஜிட் ஆலோசனையின்பேரில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் காா்த்திக், கதிரவன், விமல் ஆகியோா் கொண்ட குழுவினா் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் இலுப்பை மரக்கன்றுகளை வாங்கினா்.

தொடா்ந்து கல்லூரி வாகனங்களில் சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட 65 மாணவிகள் இருங்களூா் அடா்காட்டில் மரக்கன்றுகளை நட்டனா். தொடா்ந்து பல்வேறு உதவிகளை செய்வதாக கல்லூரி தரப்பில் இருங்களூா் ஊராட்சித் தலைவா் வின்சென்டிடம் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments