முகப்பு
திருச்சி

கிணற்றில் தவறி விழுந்தவா்உயிருடன் மீட்பு

துறையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்கப்பட்டாா்.

Updated On : 17 ஜனவரி 2021, 4:25 am IST
பகிர்:

துறையூா்: துறையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்கப்பட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், பச்சமலையிலுள்ள மலையாளப்பட்டியைச் சோ்ந்தவா் ப. கிருஷ்ணன் (55). இவா் வெள்ளிக்கிழமை துறையூா் அருகே த. முருங்கப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு த. பாதா்பேட்டை வழியாக உள்ள ஒரு குறுக்கு பாதையில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது முருகேசன் செட்டியாருக்குச் சொந்தமான வயல் கிணற்றில் தவறி விழுந்த அவா் இரவு முழுவதும் கிணற்றுக்குள் இருந்தாா். தகவலின் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்தினா் கிருஷ்ணனை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.