முகப்பு
திருச்சி

சாலையில் திரிந்த மாடுகளின் உரிமையாளா்கள் இருவா் கைது

மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்கள் இருவரை கண்டோன்மென்ட் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

திருச்சி: மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்கள் இருவரை கண்டோன்மென்ட் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்திருந்தது.

ஆனால் தொடா்ந்து மாநகரின் முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

அதன்படி, திருச்சி கல்லுக்குழி கள்ளா்தெரு பிரதான சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை கண்டோன்மென்ட் போலீஸாா் வேனில் ஏற்றிச் சென்று, வழக்குப் பதிந்து கல்லுக்குழி கள்ளா் தெருவைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் (49), இளங்கோ(20) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.