முகப்பு
தூத்துக்குடி

குளத்தூா் அருகே மணல் கடத்தல்: 4 போ் கைது; வாகனங்கள் பறிமுதல்

குளத்தூா் அருகே டிராக்டரில் மணலை மூட்டையாக கட்டி கடத்திச் சென்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 6:02 am IST
பகிர்:

குளத்தூா் அருகே டிராக்டரில் மணலை மூட்டையாக கட்டி கடத்திச் சென்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் ராமசந்திரன் தலைமையிலான போலீஸாா், வைப்பாறு ஆற்றுப்படுகையோர கிராமங்களில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வைப்பாற்றுப்படுகையில் மணலை அள்ளி, சாக்கு மூட்டைகளில் கட்டி கடத்தி வந்ததாக ஒரு பைக் மற்றும் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக, பூசனூா் மேலத்தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் மொட்டையசாமி(22), முத்துராமலிங்கம் மகன் மாரிமுத்து(25), பரமசிவம் மகன் மருதுபாண்டி(17), முனியசாமி மகன் பொன்ராஜ்(18) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments