சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
திமுக மாணவரணி சார்பில் சென்னையில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திமுக மாணவரணி சார்பில் சென்னையில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற விடியோ வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்தியது. ஆனால் தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அமைச்சர் சரத்குமார் சர்ச்சைக்கு விளக்கமளித்திருந்தார்.
இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அமைச்சர் டி.சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் இன்று காலை திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்திற்காக மேடை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார், பணிகளைத் தடுத்து நிறுத்தினர். பொது இடங்களில் போராட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன்பே மாநகர காவல் ஆணையரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறையான அனுமதி பெறாததால் மேடை அமைக்க முடியாது எனக் கூறி போலீஸார் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் திமுக மாணவர் அணி நிர்வாகிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் காவல் துறை வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
Permission has been denied for the protest that was scheduled to be held in Chennai today on behalf of the DMK student wing.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.