கோவில்பட்டியில் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர்
கோவில்பட்டியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
கோவில்பட்டியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.. பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பேரவைத் தொகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது கோவில்பட்டி, வில்லிசேரி ஊராட்சியில் தனது ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு குழந்தையின் தாய் நிர்மலா தேவி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அக்குழந்தைக்கு அதர்வா என்று பெயர் சூட்டினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.