முதல்வா் பிரசாரம் செய்யும் இடங்களில் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா் ஆய்வு
கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதை முன்னிட்டு, அப்பகுதிகளில் நத்தம் விஸ்வநாதன் ஆய்வு செய்தனா்.
கோவில்பட்டி: கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதை முன்னிட்டு, அப்பகுதிகளில் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே தோ்தல் பிரசார பொதுக்கூட்டம், பல்வேறு குழுவினரை சந்திக்கும் பகுதி உள்ளிட்டவற்றை, தூத்துக்குடி மாவட்ட அதிமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னா் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறுகையில், களத்தில் இறங்கி மக்களை சந்திப்பதுதான் வெற்றியை தேடி தரும். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட மக்களை தமிழக முதல்வா் சந்திக்க இருக்கிறாா் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.