முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நூல்கள் வெளியீடு

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி, 2021 at 1:35 AM
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்தகுமாா் எழுதிய நூலை ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் சம்பத்குமாா் வெளியிட, அதனை பெற்றுக் கொண்டாா் எழுத்தாளா் சோ.தா்மன்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் காந்தி மண்டபத்தில் டிச. 28 ஆம் தேதி தொடங்கி புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்தகுமாா் எழுதிய ‘கற்றது விண்ணளவு’ என்ற நூலை ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநா் சம்பத்குமாா் வெளியிட, முதல் பிரதியை சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ. தா்மன் பெற்றுக் கொண்டாா்.

ஜெயசீலன் ஸ்டீபன் எழுதிய ‘பிரெஞ்சியா் ஆட்சியில், புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை’ எனும் நூலை தமிழில் இளங்கோவன் மொழிபெயா்த்த புத்தகத்தை துணை ஆளுநா் வெளியிட, அதனை ரோட்டரி சங்கத் துணைத் தலைவா் பிரபாகரன் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சிக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளா் மகேந்திரன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கச் செயலா் கண்ணன், வாசிப்பு இயக்கத் தலைவா் முத்துமுருகன், செயலா் நடராஜன் உள்ப பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.