அருள் விருந்து!
1. கடலை ஆழம் பார்க்கலாம்.சான்றோர் உள்ளமோ கடலினும் ஆழமானது. ஆயினும் அதில் அளப்பரிய எளிமை நிறைந்துள்ளது.
2. உயிர்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவை என்று அறிந்து அவற்றை நேசிப்பதே நல்ல நேசமாகும்.
3. சுயநலத்துக்காகவென்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையாகாது. உண்மையான பிரார்த்தனையில் மனிதன் தன்னை மறந்து விடுகிறான்.
Advertisement
Advertisement
4. உலகப்பற்று உடையவன் மக்களுள் கடையானவன். தெய்வப்பற்று உடையவன் மக்களுள் தலையானவன்.
5. கடவுளை நேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு எவன் மனிதரை வெறுக்கின்றானோ அவன் பொய்யன்.
6. தங்களைக் கேடுகளினின்று உய்வித்துக் கொள்ள வல்லவரே பிறரையும் கேடுகளினின்று உய்விக்க வல்லவர் ஆகின்றனர்.
7. உன்னிடமுள்ள ஆத்ம சக்தியைப் பற்றி சதா சிந்தித்துக் கொண்டிரு. அதனால் நீ ஆற்றல் மிகப் படைத்தவன் ஆவாய்.
8. பனிக்கட்டியானது வெயிலில் உருகித் தனது வடிவத்தை இழக்கிறது. சான்றோர் அருளில் உருகித் தங்கள் மருளை நீக்குகின்றனர்.
சுவாமி சித்பவானந்தர்