முகப்பு
வெள்ளிமணி

புலன்களை வெற்றி கொள்ளல்

உணவை ஒழித்தவனுக்கு பொருள்கள் ஒழிவடைகின்றன. ருசி ஒன்று நீங்கலாக ருசியும் பரம்பொருளைக் கண்டதன் பின்னே இவனுக்கு ஒழிவடைகிறது.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 4:17 pm IST
பகிர்:

உணவை ஒழித்தவனுக்கு பொருள்கள் ஒழிவடைகின்றன. ருசி ஒன்று நீங்கலாக ருசியும் பரம்பொருளைக் கண்டதன் பின்னே இவனுக்கு ஒழிவடைகிறது.

- பகவத் கீதை, ஸாங்கிய யோகம்.

ஆகாரம் என்றால் வயிற்றுக்கு இடப்படும் உணவு மட்டுமன்று, அந்த அந்த இந்திரிய (புலன்) விஷயமும் அது அதற்கு ஆகாரமாம். ரஸம் என்றால் நாவில் உணரப்படும் சுவை மட்டுமன்று, ஒவ்வொரு புலனிலும் ரஸம் உண்டு. விஷயத்தில் ராகம் ரஸம் எனப்படும். நகைச்சுவை, பாட்டுச் சுவை என்பதுபோல. அந்த அந்த விஷயத்தை வெறுத்துத் தள்ளினாலும் அதிலுள்ள சுவை மட்டும் நீங்காது நிற்கும்.

Advertisement

Advertisement

ஒரு நோயாளி தன் நாக்கையும் மற்ற புலன்களையும் நோயின் கொடுமையாலோ வேறு காரணத்தாலோ அடக்குதல் கூடும். ஆனால், அந்த அடக்கம் புலன்களை வெற்றி கொள்வது ஆகாது. நோய் நீங்கியதும், புலன்கள் மனத்தை மறுபடி கவர்ந்து செல்லும். அவ்வாறானதுதான், ஐஸ்வரியம், அணிமாதி ஸித்திகள் முதலியவற்றைப் பெறுவதற்காகச் செய்யப்படும் தவமும். அசுரர்களும் தவம் செய்யவில்லையா...!

பரம்பொருளைக் கண்டபின்பே ஆசைகள் அறவே ஒழியும். சூரியன் முன்னிலையில் விளக்கு ஒளியை ஒருவரும் தேடுவதில்லை அல்லவா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.