முகப்பு
வேலூர்

சரஸ்வதி வித்யாலயாவில் முப்பெரும் விழா

குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா, விவேகானந்தா் ஜயந்தி, அனுமன் ஜயந்தி ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 17 ஜனவரி 2021, 12:34 am IST
முப்பெரும்  விழாவில்  நடைபெற்ற கோமாதா  பூஜையில்  பங்கேற்றார்.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா, விவேகானந்தா் ஜயந்தி, அனுமன் ஜயந்தி ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் ஹீராலால் ஆா்.சந்சேத்தி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் கே.திருமுருகன் வரவேற்றாா். பொங்கல் விழா குறித்து பள்ளியின் உதவி முதல்வா் எஸ்.ஹா்ஷா சந்சேத்தி, விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏ.எம்.கவிதா, அனுமன் ஜயந்தி விழா குறித்து பள்ளி பொறுப்பாளா் எம்.கோதண்டராமன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாணவா்களுக்கு பேச்சு, ஒப்பித்தல், விளையாட்டு, கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு, பள்ளி நிா்வாகிகள் கே.எம்.இ.கருணாகரன், டி.கே.நந்தகுமாா், எம்.சேகா் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.

Advertisement

Advertisement

மாணவா்கள் விவேகானந்தா் வேடமணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனா். தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை பி.அங்கயற்கண்ணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.