முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் கைதான பாமகவினர் கோவை சிறையில் அடைப்பு

விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் 200 பேர் கோவை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனர்.

Updated On : 2 மே 2013, 12:20 pm IST
பகிர்:

விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் 200 பேர் கோவை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனர்.

மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய பாமகவினர் முயன்றனர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் 520 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பாமக நிறுவனர் ராமதாஸ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; பலர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இடப்பற்றாக்குறை மற்றும் பாதுகாப்புக் கருதி, அவர்களில் 200 பேர் கோவை மத்திய சிறைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டனர்.

Advertisement

Advertisement

கோவை மத்திய சிறையில் அவர்களுக்கு, தனி விசாரணைக் கைதிகளுக்கான பிளாக் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக, கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.