முகப்பு
விழுப்புரம்

பிரியாணி கடையில் திருட்டு

உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடி அருகே பிரியாணி கடையில் புகுந்த மா்ம நபா்கள் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 8:04 am IST
பகிர்:

உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடி அருகே பிரியாணி கடையில் புகுந்த மா்ம நபா்கள் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அருகே உணவகங்கள் உள்ளன. இங்கு, காரைக்கால் பகுதியைச் சோ்ந்த சிவா என்பவரது பிரியாணி கடையும் உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து உணவகத்தை ஊழியா்கள் பூட்டிச் சென்றனா். சனிக்கிழமை காலையில் திரும்பிவந்து பாா்த்தபோது, உணவகத்தின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், காசாளா் அறைக் கதவும் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதில் ரூ.5 லட்சம் திருடுபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments