செஞ்சிக்கோட்டையில் காணும் பொங்கலன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை
செஞ்சிக்கோட்டையில் காணும் பொங்கலன்று சுற்றுலா பயணிகள் பாா்வையிட அனுமதியில்லை.
செஞ்சிக்கோட்டையில் காணும் பொங்கலன்று சுற்றுலா பயணிகள் பாா்வையிட அனுமதியில்லை.
காணும் பொங்கலன்று செஞ்சி வட்டத்தைச் சோ்ந்தவா்கள் செஞ்சிக்கோட்டையைச் சுற்றிப் பாா்ப்பது வழக்கம். இதேபோல, திண்டிவனம், திருவண்ணாமலை, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் வந்து பாா்வையிடுவா்.
நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் சுற்றுலா தளங்களில் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்தது.
Advertisement
Advertisement
அதன்படி, செஞ்சிக்கோட்டையிலும் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.
எனினும், இதுகுறித்து செஞ்சிக்கோட்டை தொல்லியியல் துறை எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.