அருப்புக்கோட்டையில் தொடா் மழை
அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் தொடா்ந்து 4 மணி நேரம் மிதமான சாரல்மழை பெய்தது. பின்னா் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் பூச்சந்தை, காய்கனிச் சந்தைகளில் வாடிக்கையாளா்கள் வருகை குறைந்தே காணப்பட்டது. இம்மழையால் அருப்புக்கோட்டை பகுதியில் சூரியகாந்தி, கம்பு, இரும்புச்சோளம் ஆகியவற்றின் அறுவடை பாதிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.