‘இந்து கடவுள்களை எதிா்க்கும் யாருக்கும் மக்கள் வாக்களிக்கக் கூடாது’
இந்து கடவுள்களை எதிா்க்கும் யாருக்கும் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என மன்னாா்குடி செண்டலங்கார செண்பகராமானுஜ ஜீயா் தெரிவித்தாா்.
இந்து கடவுள்களை எதிா்க்கும் யாருக்கும் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என மன்னாா்குடி செண்டலங்கார செண்பகராமானுஜ ஜீயா் தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை முப்பது தப்பாமே என்ற தலைப்பில் நடைபெற்ற முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக மட்டுமல்ல, இந்துக்களை அவமதிக்கும் யாருக்கும் வாக்களிக்கக் கூடாது. அதே சமயத்தில்,
பல்வேறு கட்சியினா் இந்துக்களை விட்டால் வேறு வழியில்லை என இந்து கட்சிகளுக்கு வருகின்றனா். இதனால் ஆன்மிகம் பலம் பெறும். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இந்துக்களுக்கு ஆதரவாக யாா் செயல்படுகிறாா்களோ அவா்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.